மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் முற்பகுதிவரை 11-ல் இருக்கிறார். 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 2-க்குடைய சுக்கிரன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். எனவே பொருளாதாரச் சிக்கல்கள் விலகும். பெரியளவு சேமிப்புக்கு இடமில்லையென்றா லும் சிரமங்கள் இல்லாத வகையில் தேவைகள் நிறைவேறும். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றிற்குக் குறைவிருக்காது. சிலருக்கு தொழில் மாற்றம் அல்லது தொழில்வகையில் ஊர் மாற்றம் உண்டாகும். சிலர் முதலீடு அதிகம் செய்யாதவாறு சுயதொழிலில் ஈடுபடலாம். தேக சுகத்தில் சிறுசிறு தொந்தரவுகள் வந்துவிலகும். பிள்ளைகளின் எதிர் கால நன்மை கருதி சில திட்டங்களை செயல் படுத்தலாம். அதை நடை முறைப்படுத்தும் வாய்ப்பு களும் உருவாகும். கூட்டுத் தொழில் புரிவோருக்கு மனக் கிலேசம் தோன்றும். சிப்பந்திகளால் சங்கடமும் வரும். வேலையில் டென்ஷன், போட்டி, பொறாமை, திருஷ்டி ஆகியவற்றையும் சந்திக்கநேரும். 11-ல் உள்ள செவ்வாய் 8-ஆம் பார்வையாக 6-ஆமிடத்தைப் பார்க்கும் பலன் அதுதான்.

ரிஷபம்

Advertisment

இந்த மாதம் முழுவதும் ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் இருக்கிறார். 7-ல் உள்ள குரு ராசியைப் பார்ப்பதால் ராசிநாதன் மறைந்த குற்றம் விலகும். ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடந்தாலும்- அது எத்தனையாவது சுற்றாக இருந்தாலும் பொங்குசனியாகப் பொலிவைத் தரும். ரிஷப ராசிக்கும் துலா ராசிக்கும் சனி ராஜயோகாதிபதி என்பதால், சனி 8-ல் இருந்தாலும் அனுகூலமான பலன்கள் நடக் கும். மாத முதல் வாரம் வரை 2-க்குடைய புதன் 6-ல் இருக்கிறார். குடும் பத்தில் சிறுசிறு பொருளாதாரப் பற்றாக்குறை இருக்க லாம். 8-ஆம் தேதி 7-ஆமிடத்துக்கு மாறுகிறார். அதன் பிறகு பற்றாக் குறை நிலை விலகும். கணவன்- மனைவிக் குள் ஒற்றுமையும் அன்யோன்யமும் உண்டா கும். பிள்ளைகள் வகையில் உள்ள தொல்லைகள் விலகும். தாய்வழி உறவு களால் அனுகூலமும் ஆதரவும் பெருகும். நண்பர்களால் நல்லுதவியும் மேன்மையும் ஏற்படும். "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கன் களைவதாம் நட்பு' என்ற குறளுக்குப் பொருத்தமாக நல்ல நண்பர் களைச் சந்திக்கலாம். நன்மைகளை சிந்திக்க லாம். சிலருக்கு எதிர்பாராத யோகங்கள் தேடிவந்து அணைக்கும்.

மிதுனம்

இந்த மாதம் முதல் வாரம் மிதுன ராசிநாதன் புதன் 5-ல் சுக்கிரனோடு கூடி யிருக்கிறார். சுபவிரயங்களும் மங்களச் செலவுகளும் ஏற்படலாம். 12-க்குடையவர் 5-ல் ஆட்சி. ஏற்கெனவே கொடுத்துவைத்த வாராக்கடன்கள் எல்லாம் இப்போது வரும் நேரமாக அமையும். 8-ஆம் தேதிமுதல் ராசிநாதன் புதன் 6-ல் மறைகிறார். பொதுவாக புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது என்பது ஜோதிட விதி. 7-க்குடைய குருவுடன் கூடியிருக்கிறார். உங்களது வாழ்க்கைத் தேவைகள், வசதிகள் அனைத்தும் பூர்த்தியா கும். உங்கள் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். 11-க்குடைய செவ்வாய் 9-ல் இருக்கிறார். பூர்வீக சொத்து சம்பந்தமான நல்ல தீர்வுகள் காணப்படும். பூமி, மனை, கட்டடம், வாகன யோகம் அமையும். உடன் பிறந்தவர்கள் அல்லது நண்பர்கள் வகையில் உறவு பலப்படுவதோடு உதவியும் ஒத்தாசை யும் உண்டாகும். 6-ல் இருக்கும் குரு தொழில் வகையில் உள்ள போட்டி, பொறாமைகளை அதிகமாக்கினாலும் பாதிப்புகளுக்கு இடமில்லாத வகையில் செயல்படும். உடல் நலத்தில் சிறுசிறு தொந்தரவுகள் ஏற்படலாம். மருத்துவச் செலவுகளும் ஏற்படும்.

கடகம்

கடக ராசிக்கு 5-ல் குரு நின்று ராசியைப் பார்ப்பது ஒரு பெரிய பலம்தான். என்றா லும் ஜென்ம ராசியிலுள்ள ராகு ஒவ்வொரு காரியத்திலும் சங்கடங்களை சந்தித்து, பின்தான் வெற்றியை ஏற்படுத்தித் தருவார். உதாரணமாக, ஒரு செயலை இத்தனை நாட்களுக்குள் முடிக்கலாம் என்று அட்ட வணை போட்டு நடத்த முற்பட்டாலும், குறிப்பிட்ட நாளில் முடியாமல் இழுபறி நிலையை சந்தித்து பின்புதான் பூர்த்தி யாகும். ஆனாலும் வெற்றி கிடைக்கும்- தாமத வெற்றியாக அமையும். செல் வாக்கு, திறமை, மதிப்பு, மரியாதை இவற்றுக்கு எந்தக் குறையும் வராது. சகோதர- சகோதரி வகையில் பனிப்போர், மனசங்கடம், சஞ்சலங்கள் உண்டாகலாம். "நீரடித்து நீர் விலகாது' என்ற அடிப்படையில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் வீண் மனவருத்தங்களை விலக்கலாம். ஆன்மிக நாட்டமும், தெய்வத் தலயாத்திரைகளும், குலதெய்வ வழிபாடும், சித்தர்பீட தரிசனமும் உங்களை வழிநடத்திச் செல்லும். குருவருளும் திருவருளும் உங்களுக்குத் துணைபுரியும். குருவருள் இருந்தால் திருவருள் தானாகவே அமையும்.

சிம்மம்

Advertisment

சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பகுதி வரை 4-ல் குருவுடன் கூடியிருக்கிறார். 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். கடந்த மாதம் தொழிலில் காணப்பட்ட சிக்கல்கள், சிரமங்கள் எல்லாம் இந்த மாதம் சரியாகும். வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டி ருந்தவர்களுக்கு வேலை அமையும். 4-ல் உள்ள குரு 10-ஆம் இடத்தையும் 12-ஆம் இடத்தையும் பார்ப்பதால் தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் சில சுபவிரயங்களையும் மேற்கொள்ளலாம். சிறப் பான மாற்றங்களும் சீர்திருத்தங்களும் செயல் படும். புதுமுயற்சிகள் கைகூடும். 5-ல் உள்ள சனி பிள்ளைகள் வகையில் சில சங்கடங் களையும் பிரச்சினைகளையும் தருவார். 6-ல் உள்ள கேது சத்ருஜெயம், கடன் நிவர்த்தி, நோய் நிவாரணம், வழக்குகளில் சாதகமான முடிவுகள் போன்ற நற்பலன்களைத் தருவார். குடும்பத்திலுள்ள குழப்பங்களும் பொருளாதாரச் சிக்கல்களும் மாதப் பிற்பகுதியில் விலகும். 9-க்குடைய செவ்வாய் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். பக்தி வழிபாடு, ஆன்மிகப் பயணம் கைகூடும். பூமி, வீடு சம்பந்தமான கட்டுமான முயற்சிகள் பலிதமாகும்.

கன்னி

kuberar

கன்னி ராசிநாதன் புதன் 2-க்குடைய சுக்கிரனோடு சேர்ந்திருக்கிறார். 2-க்குடைய சுக்கிரன் ஆட்சி. கணவன்- மனைவிக்குள் சச்சரவு, குடும்பத்தில் குழப்பம், அமைதி யின்மை போன்ற பலன்களிலிருந்து விடுபட லாம். செல்வாக்கு, திறமை, மரியாதை, எல்லாராலும் பாராட்டத்தக்கவாறு மதிப்புகள் உயரும். பொருளாதாரத்தில் சரளமான பணப்புழக்கம் காணப்பட்டாலும் வரவு- செலவு சரிசமமாகவே செயல்படும். 4-ல் உள்ள சனி தாய் சுகம், தன் சுகம் இவற்றில் மருத்துவச் செலவுகளையும் விரயங்களையும் ஏற்படுத்துவார். 5-ல் கேது இருப்பது புத்திர தோஷம் என்றாலும், புத்திர காரகன் குரு வீட்டில் சனி நிற்பதால் தாமத வாரிசுக்கு யோகமுண்டு. ஏற்கெனவே பிள்ளைகளைப் பெற்றவர்கள் பிள்ளைகளால் ஆதாயமடைய லாம். பெண் குழந்தைகளைப் பெற்றவர் களுக்கு ஆண் வாரிசு யோகமும், ஆண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்குப் பெண் வாரிசு யோகமும் அமையும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் சங்கடங்கள் தோன்றும். பங்கு பாகப்பிரிவினையில் சச்சரவுகள் வரலாம்.

துலாம்

Advertisment

துலா ராசிநாதன் சுக்கிரன் ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். 7-ஆம் இடத்தைப் பார்க்கிறார். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் அன்யோன் யமும் கூடும். பூசல்கள் விலகும். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும். 2-ல் குரு நின்று 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். எனவே தொழில் வளமாகும். பதவி, வேலை எல்லாவற்றிலும் நிம்மதி உண்டாகும். மனதை வருத்திய பல சங்கடங்கள் மறைந்துவிடும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அனுபவித்த சங்கடங்கள் எல்லாம் உங்களுக்கு உலகத்தைப் புரியவைத்தது. 3-ல் உள்ள சனி உடன்பிறந்த சகோதர- சகோதரிகளிடையே சில செலவினங் களை எதிர்கொள்ள வைக்கும். 4-ல் உள்ள கேது உடல்நலத்தில் சிறுசிறு தொல்லை களைத் தரலாம். 5-ல் உள்ள செவ்வாய் 4-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தைப் பார்க்கிறார். திடீர் யோகமும் அதிர்ஷ்டமும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பணப்பற்றாக்குறை விலகும். தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் வகையில் அல்லது தாய்மாமன்வழியில் சில சங்கடங்களைச் சந்திக்கநேரும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் 17-ஆம் தேதிவரை 4-ல் இருக்கிறார். 2-ல் உள்ள சனி அவரைப் பார்க்கிறார். ஏழரைச்சனியில் பாதச்சனி நடக்கிறது. பொதுவாக சனி, செவ்வாய் பார்வை நல்ல தல்ல என்றாலும் இங்கு செவ்வாய் ராசிநாதன் என்ற அடிப்படையில் விதிவிலக்குண்டு. ஜென்மத்திலுள்ள குரு பார்க்கும் இடங்கள் நல்ல இடங்கள் என்பதால் பாதச்சனி யோகச்சனியாக மாறும். உங்கள் திட்டங்களும் எண்ணங்களும் கைகூடும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், லாப நஷ்டங்களைச் சந்தித்தா லும், வெற்றி- தோல்விகளை அடைந்தாலும், நீர் வற்றினாலும் உயர்ந்தாலும் அதற்கேற்றபடி தாமரை மிதந்துகொண்டே இருப்பதுபோல நிலைமாறாமல் செயல்படுவீர்கள். உங்கள் உடலும் மனமும் புது வேகமும் புத்துணர்ச்சி யும் அடையும். தொல்லைகள் எல்லாம் தொலையும். சிலருக்கு குடியிருப்பு மாற்றம் ஏற்படலாம். அது முன்பிருந்ததைவிட நல்ல இடமாகவும் அமையும். ஏழரைச்சனிக் காலத்தில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனமுடனும் நடந்துகொள்வது அவசியம். ஜாதகரீதியான பரிகாரங்களை அவசியம் செய்துகொள்ள வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்கு 11-க்குடைய சுக்கிரன் 11-ல் ஆட்சியாக இருக்கிறார். உங்களுடைய செயல்பாட்டில் வெற்றிகளைக் காணலாம். 12-ல் இருக்கும் குரு ரிஷப ராசியைப் பார்க்கிறார். எனவே குரு, சுக்கிரன் சம்பந்தம் பெறுகின்றனர். நன்மை உண்டு; நல்லதே நடக்கும். உத்தியோகத்தில் சுமை இருந்தாலும் அது சுகமான சுமைகள்தான். அதனால் மகிழ்ச்சியும் மனநிறைவும் உயர்வும் உண்டா கும். வீடு, இடம், பூமி, பிளாட், வாகனம் வாங்க வும் கடன் வாங்கலாம். தொழில் வளர்ச்சிக் காகவும் முன்னேற்றத்துக்காகவும் கடன் வாங்கலாம். புதிய தொழில் திட்டங்களை கூட்டுமுயற்சியில் செய்ய முனையலாம். 12-ல் உள்ள குரு விரயங்களையும் செலவுகளையும் ஏற்படுத்தினாலும் அதை சுபவிரயமாகவும் சுபச்செலவாகவும் மாற்றியமைத்து திட்டங் களை செயல்படுத்தலாம். சிலர் உத்தியோக மாறுதலாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். சிலர் தொழிலில் மாற்றம் செய்யலாம். 3-ல் உள்ள செவ்வாயை சனி பார்ப்பதால் உடன்பிறந்தவழி உறவில் சிறுசிறு சங்கடங்களை சந்திக்கநேரும் என்பதால், பல விஷயங்களில் பெருந்தன்மையோடு நடக்க முயற்சி செய்யுங்கள்.

மகரம்

மகர ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடந்தாலும் சனிக்கு வீடு கொடுத்த குரு 11-ஆம் இடத்தில் இருப்பதால் நற்பலன்கள் வந்துசேரும். 5, 10-க்குடைய சுக்கிரன் 10-ல் ஆட்சி. தொழில்துறையில் சில புதிய முதலீடு கள்மூலம் சுபவிரயங்களை மேற்கொள்ளலாம். வேலை, உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை அமையும். வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்போருக்கும் முயற்சி கைகூடும். 2-க்குடைய சனி 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். செலவுகள் தவிர்க்க முடியாதவையாக அமைந்தாலும் வரவுகளும் ஒருபுறம் வந்துகொண்டிருக்கும். ஜென்ம கேது சில விஷயங்களில் அலைக்கழிப்பை ஏற்படுத்தலாம். 7-ல் ராகு. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சலசலப்புகள் தோன்றினாலும் 11-ல் நின்று குரு பார்ப்பதால் (7-ஆமிடத்தை) ஒற்றுமை விலகாது. ஊடல் இருந்தால்தானே கூடலுக்கும் வாய்ப்பு வரும். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். புதிய வாகனம் வாங்கும் அவசியம் ஏற்படலாம்.

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார். 11-ஆம் இடம் லாப ஸ்தானம், ஜெய ஸ்தானம். 11-க்குடைய குரு 10-ல் இருக்கிறார். அவர் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். எனவே தொழில், வாழ்க்கை, குடும்பம், பொருளா தாரம் இவற்றிலெல்லாம் நற்பலன்களை அடையலாம். 12-ல் உள்ள கேது தொழில் சம்பந்தமான முயற்சிகளில் அலைச்சல்களை ஏற்படுத்தினாலும் தோல்விக்கும் தொய்விற் கும் இடமிருக்காது. 6-ல் ராகு. போட்டி, பொறாமைகளை வென்றுவிடலாம். பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் மதிப்பும் மரியாதையும் உயரும். கௌரவம் ஏற்படும். வேலை பார்க்கும் மகளிருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும். பட்டம் பெற்று குடும்பத் தலைவியாக இருப்பவர் களுக்கு புதிய உத்தியோக வாய்ப்பு உண்டா கும். வைத்தியச்செலவுகளை விடைகொடுத்து அனுப்பிவிடலாம். குடும்பத்தில் அனைவருக்கும் ஆரோக்கியம் ஏற்படும். பிள்ளை களால் நன்மதிப்பும் பாராட்டும் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு சிறந்து விளங்கும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். "ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு' என்பது பழமொழி. அதன்படி ஏற்கெனவே வேலை பார்த்துவந்த இடத்திலிருந்து வெளியேறி புதிய வேலை அல்லது புதிய தொழிலைத் தொடங்கியவர்களுக்கு நற்காலம், பொற்காலமாக அமையும். 2-க் குடைய செவ்வாய் 12-ல் மறைந்ததால் அவ்வப்போது பணப்பற்றாக்குறைகளை சந்திக்கநேரும். கொடுக்கல்- வாங்கலில் நாணயத்தைக் காப்பாற்றலாம். சற்று கால தாமதமானாலும் வாக்கைக் காப்பாற்றி விடலாம். 10-க்குடையவர் 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் செயல்படும். அது உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்ப டைத் தேவைகளை நிறைவேற்றும். சகோதர வகையில் பிரச்சினைகளும் சங்கடங்களும் சச்சரவுகளும் தோன்றினாலும், உறவைப் பொருத்தவரை தாமரை இலை தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும். 8-க்குடையவர் ஆட்சி என்பதால் திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் ஏற்படலாம்.